14 Jan 2010

ஆனந்த விகடன் விலை 100 ரூபாய்


இரு வாரங்களுக்கு முன் எனது நண்பர் ஆனந்த விகடன் வாங்க கோபி சென்றுள்ளார். அது அவர் வழக்கமாக புத்தகம் வாங்கும் கடைதான். 15 ரூபாய் கொடுத்து புத்தகம் கேட்டபோது கடைக்காரரோ இந்த வார இதழ் 100 ரூபாய் என்று சொல்லியுள்ளார். ஏனென்று கேட்டதற்கு ஏர்செல் சிம் இலவசம் அதனால் தான் என்று சொல்லியிருக்குறார்.

இவரோ புத்தகத்தில் 15 ரூபாய் தானே போட்டுருக்கு என்று கேட்டதற்கு, அதெல்லாம் தெரியாது 100 ரூபாய் தான் என்றுள்ளார். சரி எனக்கு சிம் வேணாம் புத்தகம் மட்டும் கொடுங்க போதும் என்று கேட்டதற்கு, அப்படியெல்லாம் தரமுடியாது என்று கடைக்காரர் சொல்ல இவர் ஆனந்தவிகடன் அலுவலகதிற்கு போன் செய்துள்ளார். ஆனால் அங்கு யாரும் போனை எடுக்கவில்லை.

வீட்டிக்கு வந்து மீண்டும் போன் செய்துள்ளார், அப்போது பேசிய ஒருவர் இவரிடம் என்ன விசயம் என்று கேட்டுவிட்டு, நாங்கள் புத்தகத்திற்கு ஏற்பாடு செய்கிறோம் என்று கூறியுள்ளார். சரி கடைக்காரர் மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் என்று கேட்க, அவரை நாங்கள் எதுவும் செய்ய முடியாது, கேட்டால் நான் வேறு கடையில் இருந்து வாங்கி வந்து விற்கிறேன் என்பார் என்று சொல்லிவிட்டு நண்பரின் அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார்களாம்.

சிறுது நேரம் கழித்து கோபி பகுதி முகவர் போன் செய்து தனக்காக வைத்திருக்கும் புத்தகத்தை தருவதாக கூறியுள்ளார். அவரும் புத்தகம் மட்டும் வேண்டுமா இல்லை சிம் கார்டும் வேண்டுமா என்று கேட்டுள்ளார். ஆனந்த விகடன் புத்தகத்துடன் வரும் எல்லாமே வேண்டும் என்று சொல்லி இவரும் வாங்கி வந்துள்ளார்.

யாரிடம் சொன்னால் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று தெரியாமல் என்னிடம் புலம்பினார். அந்த வாரம் நான் சிம் கார்டு மற்றும் அந்த சின்ன இணைப்பு புத்தகம் இல்லாமல் ஆனந்த விகடன் வாங்கியதை அவரிடம் நான் சொல்லவில்லை.

13 கருத்துக்கள்..:

ஆரூரன் விசுவநாதன் said...

இதுபோன்ற அநியாயங்கள் எல்லா இடங்களிலும் நடக்கிறது உண்மை.

ஹிந்து பத்திரிக்கைக்கு வருட சந்தா செலுத்தியுள்ளேன். கடந்த மாதம் ஒருவர் வந்து வருடத்திற்கு 100 ரூபாய் தந்தால் தான் பத்திரிக்கை உங்களுக்கு வரும். இல்லையென்றால் வராது என்று சொன்னார். இது குறித்து ஹிந்து அலுவலத்தில் தொடர்பு கொண்டு பேசியபோது, ஈரோட்டில் இருக்கும் அலுவலரிடம் பேசச் சொன்னார். அவரோ, நீங்கள் கொடுத்துவிடுங்கள் சார், எல்லோரும் கொடுக்கிறார்கள். என்று எனக்கு அறிவுரை செய்தார். தொடர்ந்து போராடிய பின் இப்பொழுதுதான் ஒழுங்காக வரத் தொடங்கியுள்ளது.

என்னத்தச் சொல்வது?

vasu balaji said...

சும்மாவே படிக்கிற பழக்கம் குறைஞ்சிட்டு வருது. இதில இப்படியெல்லாம் வேற கொள்ளையடிச்சா விடிஞ்சிரும். கார்பொரேட் கொள்ளை வரம்பு மீறிப் போகுது.

ஈரோடு கதிர் said...

ஏர்செல் சிம் 50 ரூவாக்கே கெடைக்குதே...

இந்தக் கொடுமை ஏன்.....

திருவாரூர் சரவணா said...

நீங்க வேற...திருவாரூர் பஸ் ஸ்டாண்டுல முகவரி சான்று, போட்டோ கொடுத்துட்டு இலவசமாவே சிம் வாங்கிக்குங்க அப்படின்னு கூவுறாங்க.

அதோட போன வருஷம் விகடனோட கொடுத்த சிம்முல ஒரு ஏர்செல் நம்பருக்கு ஒரு பைசா கூட இல்லாம இலவசமாவே பேசிக்குற சலுகை இருந்தது. ஆனா இந்த வருஷம் ஒரு நம்பருக்கு நிமிஷத்துக்கு பத்து பைசா ஆபர். அவ்வளவுதான். இதனால ஒரு பிரயோசனமும் இல்லை. இதுக்கு போய் அலட்டிக்கலாமா.ஒரு வகையில திருட்டு வி.சி.டிய பார்த்து திரையுலகம் கத்துறதுக்கும் இவங்க படிக்கிற பழக்கம் மக்கள் கிட்ட குறையுதுன்னு சொல்றதுக்கும் பெரிய வித்தியாசம் இருக்குறதா தெரியல.

எங்க ஊருல புத்தக கண்காட்சி நடந்தது. அதுல நடந்த ஒரு கூத்த நாளைக்கு என் பதிவுல போடப் போறேன். இது மட்டும் இல்லாம விகடன் தொடர்பா எனக்கு பல அனுபவம் ஏற்பட்டதையும் பகிர்ந்துக்க போறேன். பாருங்களேன்.

அன்புடன் நான் said...

இது மானங்கெட்ட தொழிலால்ல தெரியுது.... நல்ல பதிவுங்க... இதனால சிலர் எச்சரிக்கையா... இருக்கலாம்.

உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனதினிய... பொங்கல் வாழ்த்துக்கள்.

தாராபுரத்தான் said...

நானும் சிம் கார்டு மற்றும் அந்த சின்ன இணைப்பு புத்தகம் இல்லாமல் ஆனந்த விகடன் வாங்கியதை யாரிடமும் சொல்லவில்லை.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இந்தப் பஞ்சாயத்துக்காகத்தான் நான் இதையெல்லாம் படிக்கிறதில்ல.

வால்பையன் said...

சிம் இல்லாமல் பத்து ருபாய்க்கு வாங்கினேன்!

akbar john said...

ஐயோ :பகல் கொள்ளையாள
இருக்கிறது

முனைவர் இரா.குணசீலன் said...

ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருந்து கொண்டேதான் இருப்பார்கள் நண்பரே..

வரதராஜலு .பூ said...

//
வால்பையன் said.
சிம் இல்லாமல் பத்து ருபாய்க்கு வாங்கினேன்!//

எப்படிங்க? ஆ.வி. விலை 15 ரூபாதானே?

Unknown said...

நன்றி ஆரூரன் விசுவநாதன்

நன்றி வானம்பாடிகள்

நன்றி ஈரோடு கதிர்

நன்றி சரண்

நன்றி சி. கருணாகரசு

நன்றி தாராபுரத்தான்

நன்றி ஸ்ரீ

நன்றி வால்பையன்

நன்றி akbar john

நன்றி முனைவர்.இரா.குணசீலன்

நன்றி வரதராஜலு .பூ

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நான் சிம் வாங்கல.. புக்கும் வாங்கல.. ஹி..ஹி

தமிழில் தட்டச்ச..

Google Indic Transliterator

உங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..


எங்க ஊர்காரங்க..