22 Jan 2010

படித்த கவிதை

சில வருடங்களுக்கு முன் ராஜேஷ்குமாரின் ஒரு நாவலில் படித்த கவிதை.
இதை எழுதியது யாரென்று தெரியவில்லை..


அந்தரத்தில் ஒரு உப்பரிகை
அதில் ஒரு சொப்பனத்து சுந்தரி
நேர் கீழே பொருத்திப்பார்க்க இரு மல்லர்கள்
நெருங்கி வந்தார்
கிசுகிசுத்தார்
நீசமகள் ஞானமில்லா வெற்றலகுப் பிண்டம்
இதைப் பெற்றுவிட போரிடவா என்றார்
விட்டுவிடு என்றார்
விலகி நின்றார்
உப்பரிகை நிலா உள்முற்றம் போயிற்று.

5 கருத்துக்கள்..:

ப்ரியமுடன் வசந்த் said...

சுத்தமா விளங்க வில்லை பாஸ்.. விளக்கமென்னவென்று கூற இயலுமா?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//சுத்தமா விளங்க வில்லை பாஸ்.. //
Same blood.

thiyaa said...

அப்படியோய்.....????

Unknown said...

//.. விளக்கமென்னவென்று கூற இயலுமா? ..//
அப்படியெல்லாம் கேக்கபடாது..

நன்றி பிரியமுடன்...வசந்த்..
நன்றி ஸ்ரீ..
நன்றி தியாவின் பேனா..

பாரம்பரிய மீனவன் said...

பிழைகளை திருத்திக் கொள்ளவும்..
நானும் அந்த நாவலை படித்து இன்ஸ்பைர்ஆகி மனதில் பதிந்து போனது..

அந்தரத்தில் உப்பரிகை
அதில் ஓர் சொப்பனத்து சுந்தரி
நேர் கீழே
பொருதிப்பார்க்க இரு மல்லர்,

நெருங்கி வந்தார்
கிசுகிசுத்தார்...

நீசமகள்,
ஞானமில்லா வெற்றழகுப் பிண்டம்
இதைப் பெற்றுவிட போரிடவோ
அறிவுதாங்குமிரு பேரகலப் புயங்கள்
விட்டுவிடு என்றார்
விலகி நின்றார்

உப்பரிகை நிலா
உள்முற்றம் போயிற்று... "

தமிழில் தட்டச்ச..

Google Indic Transliterator

உங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..


எங்க ஊர்காரங்க..