11 Dec 2009

ஆட்டோவும் நானும்

பெங்களூரிலிருந்து ஒருமுறை ஊருக்கு போகும்பொழுது பனஸ்வாடி ரயில் நிலையத்திலிருந்து டிக்கெட் வாங்கியிருந்தேன். அந்த ரயில் நிலையத்திற்கு செல்வது எனக்கு அதுதான் முதல் முறை, மேலும் நான் தங்கியுள்ள இடத்திலிருந்து ரயில் நிலையத்திற்கு பேருந்து இல்லாததால் ஒரு ஆட்டோ பிடித்தேன்.

'பத்து மணிக்கு மேல் ஆச்சு மீட்டர்க்கு ஒன்னரை மடங்கு ஆகும்' என்றார். சரி பரவால்ல என்று சொல்லிவிட்டு, 'ஒரு பத்து நிமிடம் இருங்க சாப்பிட்டுவிட்டு வருகிறேன்' என்று கேட்டதற்கு 'பத்து ரூபாய் குடுத்துட்டு போங்க தம் அடிச்சுட்டு இருக்கேன்' என்றார். கொடுத்துவிட்டு போய் சாப்பிட்டுவிட்டு வந்து கிளம்பினோம்.

ரயில் நிலையம் வந்தவுடன் மீட்டர் நாப்பது ரூபாய் காட்டியது, அறுபது ரூபாய் கொடுத்தேன்.

ஆட்டோகாரர்: ஒரு பத்து ரூபாய் கொடுங்க.

நான்: அதுதான் அப்பவே கொடுத்தனே!

ஆ.கா: இல்ல இன்னும் பத்து கொடுங்க.

நான்: நீங்க ஒன்னரை மடங்குதானே கேட்டிங்க?

ஆ.கா: பத்து மணிக்கு மேல ஆச்சு, ஒன்னரை மடங்குக்கு யாரு வருவாங்க?

நான்: ..??!!

சரி தொலையட்டும் என்று பாக்கெட்டில் பார்த்தால், அங்கே நூறு ரூபாய்க்கு பதிலாக ஐம்பது தான் இருந்தது(பாக்கட்டில் ஒரு நூறு, ஒரு ஐம்பது, ஒரு பத்து தான் வைத்திருந்தேன்). பிறகுதான் தெரிந்தது அறுபது ரூபாய்க்கு பதிலாக நூற்றிபத்து ரூபாய் கொடுத்துவிட்டேன். பிறகென்ன அவரிடமிருந்து எழுபது ரூபாய் போக நாற்பதை வாங்கிக்கொண்டேன். மனதில் நினைத்துக்கொண்டேன், 'அல்பை பத்து ரூபாய்க்கு ஆசைப்பட்டு, நாப்பது ரூபாய விட்டுடுச்சே என்று'.

அவர் என்ன நினச்சுட்டு போயிருப்பார்??

3 Dec 2009

உலகம் ஒரு உள்ளங்கை நெல்லிக்கனி

தாமஸ் எல் பிரீட்மான்(Thomas L. Friedman) என்கிற அமெரிக்க எழுத்தாளர் வேர்ல்ட் இஸ் பிளட்(World is FLAT) என்கிற தனது மேலாண்மை பற்றிய புத்தகத்தில் கூறியது.

தொழில்நுட்பம்(Technology): நாடுகளுக்கிடையேயான தகவல் தொடர்பு இன்று காணொளி கலந்தாய்வுVideo conferencing) மூலமாக மிகவும் எளிதாகிவிட்டது. உலகின் எந்த மூலையிலிருந்தும் எங்குவேண்டுமானாலும் நினைத்த நேரத்தில் குறைவான பொருளாதார செலவில் எளிதாக தொடர்பு கொள்ளமுடிகிறது. இந்த வசதியை பயன்படுத்தி தான் அமெரிக்கா, ஈராக்கில் தனது கண்காணிப்பை நிலைநிறுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது திட்டம் தொடர்பான விளக்கங்களை கூற இந்த வசதியை பயன்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.

அவுட்சௌர்சிங்(Outsourcing): அமெரிக்கா இந்தியாவிடமும், ஜப்பான் சீனாவிடமும் மிகுதியாக அவுட்சௌர்சிங் செய்கிறது. அமெரிக்கர் ஒருவர் பீட்சா வேண்டுமென்று இந்தியாவில் பி.பீ.ஒ பணியாளரிடம் கேட்பதையும், இந்திய பணியாளர் அமெரிக்க பீட்சா நிறுவனத்திற்கு இந்த முகவரியில் பீட்சா கொடுக்கவேண்டுமென கூறுவதையும் மேற்கோள் காட்டுகிறார். ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே சண்டை நடந்தாலும் இந்த அவுட்சௌசிங்கால் இருநாடுகளும் பயனுருவதையும் தாமஸ் கூறுகிறார். மேலும் இப்பொழுது சீனர்கள் ஜப்பானிய மொழியை கற்பதில் காட்டும் ஆர்வத்தையும் குறிப்பிடுகிறார்.

ஹோம்சௌர்சிங்(Homesourcing): மத்திய கிழக்கு நாடுகளில் இந்த ஹோம்சௌர்சிங் பிரபலமாக உள்ளதாக கூறும் தாமஸ், இந்த ஹோம்சௌசிங் மூலம் இல்லத்தரசிகள் தங்களது வீட்டுவேலைகளை பார்த்துக்கொண்டே சுயமாக சம்பாதிக்கவும் செய்கின்றனர். வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டு மாடியில் பாதுகாப்பான, மனத்திற்கு இனிமையான சூழலில் இருந்து வேலை செய்கிறார்கள். இதன் மூலம் நேரம் மிச்சமாவதோடு குடும்ப பொருளாதாரமும் உயருகிறது, அதனால் நாட்டின் பொருளாதாரமும் மேலோங்கும். இந்த வகையான தொழில்நுட்ப வளர்ச்சி இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் குறைவாகத்தான் உள்ளது.

இந்த மூன்று வகையான தொழில்நுட்பமும் உலகம் சுருங்குவத்ட்கு மிக முக்கிய காரணங்களாக தனது புத்தகத்தில் கூறியுள்ளார் தாமஸ்.

அரசு அலுவலகம்

அண்ணன் பரிசல் இந்த இடுகையில் கேட்டுக்கொண்டதட்கு இணங்க எனது அனுபவமே முதல் இடுகையாக,


//.. @ பட்டிக்காட்டான்
அதத்தான் சொல்லுங்களேன்.. //


ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு மின் இணைப்பு வாங்க முடிவு செய்து, மின்சார விநியோக அலுவலகத்துக்கு(அதாங்க கரண்ட் ஆபீசு) ஒரு குழுவாக சென்றோம். அங்கே இது கோவில் என்பதால் பட்டா கிடையாது, நீங்க தர்மகர்த்தா பேர்ல மின் இணைப்பு வாங்கறோம்னு மணியகாரர், வருவாய் அலுவலர் மற்றும் தாசில்தாரர்கிட்ட ஒரு மனு கொடுதிங்கன்னா அது மாவட்ட மின் அலுவலகத்திற்கு போயிட்டு திரும்ப எங்களுக்கு வரும். அப்புறம் நாங்க வந்து இணைப்புகொடுக்கரோம்னு சொன்னாங்க.

சரின்னு ஒரு மனுவ எழுதி மணியகாரர்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு, தாசில்தார்கிட்ட போறதுக்கு பக்கத்தூர்ல ஒருத்தரையும் கூட்டிட்டு போனோம். தாசில்தாரர் மனுவ வாங்கிட்டு நான் வந்து கோவில பார்த்துட்டு தான் கையெழுத்துபோட முடியும்னு சொல்லிட்டு நாளைக்கு உங்க ஊருக்கு வர்றேன், யாரவது இங்க காலைலேயே வந்துடுங்கன்னு சொன்னார்.

நானும் என் ஒன்னு விட்ட தம்பியும் அடுத்தநாள் தாசில்தார் அலுவலகம் சென்றோம். அவரு என்ன தன்னோட ஜீப்ல வரச் சொன்னாரு. பங்குல போய் பத்து லிட்டர் டீஸல் போட்டுட்டு என்ன காசு கொடுக்க சொன்னாங்க, சரின்னு கொடுத்துட்டேன். அவரோட வரவேற்புக்கு ஒரு இரநூறு செலவாச்சு.

அன்னைக்கு சாயங்காலம் அந்த பககத்தூர்காரரு  வந்தாரு. தாசில்தாருக்கு ஒரு ஆயிரம் ரூப கொடுத்தாதான் வேல நடக்கும்னு சொல்லி வாங்கிட்டு போனாரு. அப்புறம் அவ்ளோதான், நாங்க நடையா நடந்தா பைல் இங்க இல்ல அடுத்த ஆபீஸ் போய்டுச்சுன்னு சொல்லுறாங்க, அங்க போய் கேட்ட இன்னும் தாசில்தார் ஆபீஸ்ல இருந்து பைல் வரலே அப்படிங்குறாங்க.

மறுபடியும் அந்த பக்கத்தூர்காரரோட போய் கேட்டா, நீங்க இன்னொரு மனு கொடுத்துடுங்க சீக்கிரம் வேலைய முடிச்சுடலாம்னு சொன்னாங்க, மறுபடியும் முதல்ல இருந்தான்னு வேற வழி இல்லாம அடுத்த மனுவ கொடுத்தோம்(ஒரு ஐநூறு ரூபாய் செலவோட).

இது நடக்குரதுக்குள்ள தாசில்தாரர் மாறியாச்சு. அடுத்த தாசில்தாரர் அவரே வந்து கோவில பார்த்துட்டு போயிட்டாரு, ஆனா பைல் என்ன ஆச்சுன்னு தெரியல. ஒரு பத்து நாள் கழிச்சு போய் கேட்ட மறுபடியும் பைல காணோம், இன்னொரு மனு எழுதி கொடுங்கன்னு சொன்னங்க. ஆணியே புடுங்க வேணாம்னு சொல்லிட்டு பேசாம இருந்துட்டோம்.

இதுக்கு நடுவுல மின் இணைப்பு கிடைச்சுடும் அப்படிங்கற நம்பிக்கைல வயரிங் எல்லாம் ஒரு இரண்டாயிரம் ரூபாய் செலவுல பண்ணி, வயர மின் கம்பத்துல இழுத்து கட்டினது இரண்டு வருடமா அப்படியே இருக்கு.:-(

ஊர்ல பொது பணம் ஐயாயிரம் செலவானதுக்கு என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியாம நாங்க திணறிட்டு இருக்கோம்..

நன்றி: பரிசல்காரன் வாசகனாக இருந்த என்னையும் எழுத வைத்ததற்கு.

எங்க ஊர்காரங்க..