30 Apr 2010

ஒத்த விட்டம்

மாசத்துக்கு நாலஞ்சு இடுகை போட்டு நாங்களும் ரவுடிதான்னு ஒருவழியா எல்லோரையும் நம்ப வச்சாச்சு. ஆனா பாருங்க இந்த மாசத்துல எனக்கு பெரிய சிக்கல் வந்துருச்சு. இந்த மாசம் வாடிக்கையாளர் வலை இணைப்புல (client network) இருந்ததால பிரவுசர தொறந்தாலே கைய வெட்டிடுவன்னு சொல்லிட்டாங்க.

சரி பொது கணினிக்கு(Common system) போயி படிக்கலாம்னா, குழும மின்னஞ்சல படிக்கவே ஒரு மணி நேரமாகுது. மக்களோட இடுகைய சரியா படிக்க முடியல, பின்னூட்டம் போட முடியலன்னு மனசே சரி இல்லீங்க. மாசக் கடைசி ஆக ஆக இடுகை போட முடியாம பயித்தியம் புடிக்கற மாதிரி ஆகிப்போச்சுங்க.

நேத்திக்கு தேதிய பார்த்தா 29 னு இருக்கு. அப்படியே பகீர்னு ஆகிப்போச்சு. தொடர்வண்டிபாதைலையும்(ரயில்.. வே..ங்க) புதுசா எந்த சிறப்பு வண்டியும் விடல. இடுகை போடுற மாதிரி எந்த முன்னனுப்பப்பட்ட(ஹி.. ஹி.. forward ) மின்னஞ்சலும்  இல்ல. சேரி பழைய மின்னஞ்சல் எதாவது தேறும்னு பார்த்தா, குழுமத்துல இருந்து வந்தது மட்டும்தான் கண்ணுக்கு தெரியுது.

அதுல ஒரு மின்னஞ்சல்ல வாரம் ஒரு இடுகை போட்டவங்களத்தான் ரவுடின்னு ஒத்துக்குவாங்கன்னு யாரோ சொல்லி இருந்தாங்க. என்னடா இது வம்பா போச்சு, நாம ரவுடின்னு குழும விழாவுல எல்லாம் ஒத்துட்டாங்களே, இப்போ திடீர்னு இப்படி ஒரு குண்ட தூக்கி போடறாங்கன்னு, வரைவுல இருந்தத எல்லாம் தூசி தட்டி நேத்து ஒரு இடுகை போட்டாச்சு.

ஒத்த விட்டம் ஆகாதுன்னு ஊருக்குள்ள சொல்லுவாங்கலேன்னு நேத்து பொழுதோட சரியா தூக்கமே வல்லீங்க. அதுதான் இன்னைக்கு அவசர அவசரமா இந்த இடுகை. அப்பாடா இந்த மாசக் கணக்குக்கு ரண்டு இடுகை ஆச்சு. இன்னைக்காவது நிம்மதியா தூக்கம் வருதான்னு பார்க்கலாம்.



பின்  குறிப்பு: என்னை மன்னிச்சுருங்க. வேற வழி தெரியல.

29 Apr 2010

ஒரு வரித் துணுக்குகள்(சிரிக்க மட்டும்)

Ø எனக்கு இறப்பு என்றாலே பயம். அது நடக்கும் போது நான் அங்கு இருக்க விரும்பவில்லை.

Ø
நேரம் தவறாமையில் உள்ள சிக்கல் என்னவென்றால், உங்களைப் பாராட்ட அங்கு யாரும் இருப்பதில்லை.  

Ø
நான் போதை வேண்டாமென்று சொன்னேன், ஆனால் அது என் பேச்சை கேட்பதாயில்லை. 

Ø
நான் எப்போதும் குடிக்க நினைப்பதில்லை, ஆனால் அது அடிக்கடி வழங்கப்பட்டு விடுகிறது.

Ø
வெற்றிக்கான பாதை எப்போதும் வேலை முடிவடையாமலே இருக்கிறது.

Ø
திருமணம் என்பதே விவாகரத்தின் முதன்மையான காரணமாக இருக்கிறது.

Ø
உங்களுக்கு தேவைப்படும் எல்லாமே கிடைத்தால் நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டு இருக்குறீர்கள்.

Ø
உலகின் முதல் சக்கரத்தை கண்டுபிடித்தவன் முட்டாள், மற்ற மூன்று சக்கரங்களை கண்டுபிடித்தவனே சிறந்த அறிவாளி.


Ø நமது  சமூகத்தில் பேச்சு சுதந்திரம் உள்ளதென்றால் தொலைபேசி கட்டணம் எதற்கு?

Ø வானத்தில் 3௦௦ கோடி நட்சத்திரங்கள் உள்ளதென்றால் நம்பும் ஒருவன், பூங்கா பெஞ்ச் புதிதாக சாயம் பூசப்பட்டுள்ளது என்றால் தொட்டு பார்க்கிறான்.

Ø பட்டாளத்தில்  சேர், உலகத்தை பார், புதுமையான மனிதர்களை சந்தித்து அவர்களைக் கொல்.


Ø எனது 13 வயது வரை என் பெயர் 'வாயை மூடு' என்று நினைத்திருந்தேன்.  


Ø
உங்களால் ஒரு விஷயத்தை புரியவைக்க முடியவில்லை என்றால், குழப்பிவிட்டு விடுங்கள். 

எங்க ஊர்காரங்க..