3 Dec 2009

உலகம் ஒரு உள்ளங்கை நெல்லிக்கனி

தாமஸ் எல் பிரீட்மான்(Thomas L. Friedman) என்கிற அமெரிக்க எழுத்தாளர் வேர்ல்ட் இஸ் பிளட்(World is FLAT) என்கிற தனது மேலாண்மை பற்றிய புத்தகத்தில் கூறியது.

தொழில்நுட்பம்(Technology): நாடுகளுக்கிடையேயான தகவல் தொடர்பு இன்று காணொளி கலந்தாய்வுVideo conferencing) மூலமாக மிகவும் எளிதாகிவிட்டது. உலகின் எந்த மூலையிலிருந்தும் எங்குவேண்டுமானாலும் நினைத்த நேரத்தில் குறைவான பொருளாதார செலவில் எளிதாக தொடர்பு கொள்ளமுடிகிறது. இந்த வசதியை பயன்படுத்தி தான் அமெரிக்கா, ஈராக்கில் தனது கண்காணிப்பை நிலைநிறுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது திட்டம் தொடர்பான விளக்கங்களை கூற இந்த வசதியை பயன்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.

அவுட்சௌர்சிங்(Outsourcing): அமெரிக்கா இந்தியாவிடமும், ஜப்பான் சீனாவிடமும் மிகுதியாக அவுட்சௌர்சிங் செய்கிறது. அமெரிக்கர் ஒருவர் பீட்சா வேண்டுமென்று இந்தியாவில் பி.பீ.ஒ பணியாளரிடம் கேட்பதையும், இந்திய பணியாளர் அமெரிக்க பீட்சா நிறுவனத்திற்கு இந்த முகவரியில் பீட்சா கொடுக்கவேண்டுமென கூறுவதையும் மேற்கோள் காட்டுகிறார். ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே சண்டை நடந்தாலும் இந்த அவுட்சௌசிங்கால் இருநாடுகளும் பயனுருவதையும் தாமஸ் கூறுகிறார். மேலும் இப்பொழுது சீனர்கள் ஜப்பானிய மொழியை கற்பதில் காட்டும் ஆர்வத்தையும் குறிப்பிடுகிறார்.

ஹோம்சௌர்சிங்(Homesourcing): மத்திய கிழக்கு நாடுகளில் இந்த ஹோம்சௌர்சிங் பிரபலமாக உள்ளதாக கூறும் தாமஸ், இந்த ஹோம்சௌசிங் மூலம் இல்லத்தரசிகள் தங்களது வீட்டுவேலைகளை பார்த்துக்கொண்டே சுயமாக சம்பாதிக்கவும் செய்கின்றனர். வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டு மாடியில் பாதுகாப்பான, மனத்திற்கு இனிமையான சூழலில் இருந்து வேலை செய்கிறார்கள். இதன் மூலம் நேரம் மிச்சமாவதோடு குடும்ப பொருளாதாரமும் உயருகிறது, அதனால் நாட்டின் பொருளாதாரமும் மேலோங்கும். இந்த வகையான தொழில்நுட்ப வளர்ச்சி இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் குறைவாகத்தான் உள்ளது.

இந்த மூன்று வகையான தொழில்நுட்பமும் உலகம் சுருங்குவத்ட்கு மிக முக்கிய காரணங்களாக தனது புத்தகத்தில் கூறியுள்ளார் தாமஸ்.

6 கருத்துக்கள்..:

வால்பையன் said...

மூன்றாவது தொழில் நுட்பம் காலம் காலமாக இருக்கிறதே!?

Unknown said...

//.. மூன்றாவது தொழில் நுட்பம் காலம் காலமாக இருக்கிறதே!? ..//

புரியலையே தல..

வால்பையன் said...

மூன்றாவது தொழிநுட்பம் என்ன?

தமிழ் உதயம் said...

அறிவுப்பூர்வமான இடுகை.

கமலேஷ் said...

i got more usefull message thanks for sahring...friend...

have nice day...

Unknown said...

//..மூன்றாவது தொழிநுட்பம் என்ன? ..//

தல நீங்க சொல்லுறது உண்மைதான், பெண்களோட பங்களிப்பு இல்லேன்னா நாட்டுல முன்னேற்றமே இல்ல. ஆனா நான் சொன்னது என்னான தொழில்நுட்ப அறிவு பெற்ற பெண்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவது அவ்வளவாக நடைமுறையில் இல்லை என்பதுதான்..

//.. அறிவுப்பூர்வமான இடுகை. ..//

நன்றி tamiluthayam..

//. thanks for sahring...friend...//

நன்றி கமலேஷ்..

தமிழில் தட்டச்ச..

Google Indic Transliterator

உங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..


எங்க ஊர்காரங்க..