3 Dec 2009

அரசு அலுவலகம்

அண்ணன் பரிசல் இந்த இடுகையில் கேட்டுக்கொண்டதட்கு இணங்க எனது அனுபவமே முதல் இடுகையாக,


//.. @ பட்டிக்காட்டான்
அதத்தான் சொல்லுங்களேன்.. //


ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு மின் இணைப்பு வாங்க முடிவு செய்து, மின்சார விநியோக அலுவலகத்துக்கு(அதாங்க கரண்ட் ஆபீசு) ஒரு குழுவாக சென்றோம். அங்கே இது கோவில் என்பதால் பட்டா கிடையாது, நீங்க தர்மகர்த்தா பேர்ல மின் இணைப்பு வாங்கறோம்னு மணியகாரர், வருவாய் அலுவலர் மற்றும் தாசில்தாரர்கிட்ட ஒரு மனு கொடுதிங்கன்னா அது மாவட்ட மின் அலுவலகத்திற்கு போயிட்டு திரும்ப எங்களுக்கு வரும். அப்புறம் நாங்க வந்து இணைப்புகொடுக்கரோம்னு சொன்னாங்க.

சரின்னு ஒரு மனுவ எழுதி மணியகாரர்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு, தாசில்தார்கிட்ட போறதுக்கு பக்கத்தூர்ல ஒருத்தரையும் கூட்டிட்டு போனோம். தாசில்தாரர் மனுவ வாங்கிட்டு நான் வந்து கோவில பார்த்துட்டு தான் கையெழுத்துபோட முடியும்னு சொல்லிட்டு நாளைக்கு உங்க ஊருக்கு வர்றேன், யாரவது இங்க காலைலேயே வந்துடுங்கன்னு சொன்னார்.

நானும் என் ஒன்னு விட்ட தம்பியும் அடுத்தநாள் தாசில்தார் அலுவலகம் சென்றோம். அவரு என்ன தன்னோட ஜீப்ல வரச் சொன்னாரு. பங்குல போய் பத்து லிட்டர் டீஸல் போட்டுட்டு என்ன காசு கொடுக்க சொன்னாங்க, சரின்னு கொடுத்துட்டேன். அவரோட வரவேற்புக்கு ஒரு இரநூறு செலவாச்சு.

அன்னைக்கு சாயங்காலம் அந்த பககத்தூர்காரரு  வந்தாரு. தாசில்தாருக்கு ஒரு ஆயிரம் ரூப கொடுத்தாதான் வேல நடக்கும்னு சொல்லி வாங்கிட்டு போனாரு. அப்புறம் அவ்ளோதான், நாங்க நடையா நடந்தா பைல் இங்க இல்ல அடுத்த ஆபீஸ் போய்டுச்சுன்னு சொல்லுறாங்க, அங்க போய் கேட்ட இன்னும் தாசில்தார் ஆபீஸ்ல இருந்து பைல் வரலே அப்படிங்குறாங்க.

மறுபடியும் அந்த பக்கத்தூர்காரரோட போய் கேட்டா, நீங்க இன்னொரு மனு கொடுத்துடுங்க சீக்கிரம் வேலைய முடிச்சுடலாம்னு சொன்னாங்க, மறுபடியும் முதல்ல இருந்தான்னு வேற வழி இல்லாம அடுத்த மனுவ கொடுத்தோம்(ஒரு ஐநூறு ரூபாய் செலவோட).

இது நடக்குரதுக்குள்ள தாசில்தாரர் மாறியாச்சு. அடுத்த தாசில்தாரர் அவரே வந்து கோவில பார்த்துட்டு போயிட்டாரு, ஆனா பைல் என்ன ஆச்சுன்னு தெரியல. ஒரு பத்து நாள் கழிச்சு போய் கேட்ட மறுபடியும் பைல காணோம், இன்னொரு மனு எழுதி கொடுங்கன்னு சொன்னங்க. ஆணியே புடுங்க வேணாம்னு சொல்லிட்டு பேசாம இருந்துட்டோம்.

இதுக்கு நடுவுல மின் இணைப்பு கிடைச்சுடும் அப்படிங்கற நம்பிக்கைல வயரிங் எல்லாம் ஒரு இரண்டாயிரம் ரூபாய் செலவுல பண்ணி, வயர மின் கம்பத்துல இழுத்து கட்டினது இரண்டு வருடமா அப்படியே இருக்கு.:-(

ஊர்ல பொது பணம் ஐயாயிரம் செலவானதுக்கு என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியாம நாங்க திணறிட்டு இருக்கோம்..

நன்றி: பரிசல்காரன் வாசகனாக இருந்த என்னையும் எழுத வைத்ததற்கு.

10 கருத்துக்கள்..:

துளசி கோபால் said...

வலை உலகில் எழுதவந்தமைக்கு நல்வரவு.

நடை நல்லா வந்துருக்கு.

கார்க்கி said...

வாங்க சகா.. ஒரு கை பார்த்திடுவோம்..:)))

பரிசல்காரன் said...

துளசியம்மா சொல்ற மாதிரி, நல்ல நடைங்க உங்களுக்கு. (எழுத்து நடையை சொல்றேன்) ஒரு ஃப்ரெண்டுகூட, அந்தி மாலைல ஆளில்லாத ரயில்வே ஸ்டேஷன்ல உட்கார்ந்து கதை கேட்கறா மாதிரி இருக்கு.

இதே மாதிரி நீங்க பகிர்ந்துக்க நினைக்கற சில விஷயங்களை ஜோவியலா எழுத ஆரம்பிங்க.. கலக்கலாம்!

பரிசல்காரன் said...

என்னோட போன கமெண்டைப் படிக்கறப்போ...

’ரெண்டு ஃப்ரெண்டுக ஒக்கார்ந்து பேசற ரயில்வே ஸ்டேஷன் எப்படி ஆளில்லாத ரயில்வே ஸ்டேஷனா இருக்க முடியும்?’ன்னு உங்களுக்கு தோணிச்சா?

அப்ப நீங்க ப்ளாக்கராயாச்சுன்னு அர்த்தம்!

வால்பையன் said...

இதை அப்படியே புகாராக எழுதி கலைக்டர் அலுவலகத்தில் கொடுக்கவும்!

Ganpat said...

//இதை அப்படியே புகாராக எழுதி கலைக்டர் அலுவலகத்தில் கொடுக்கவும்!//

பிறகு இரண்டு வருடம் கழித்து ,கலெக்டர் பேர் உள்ள புகாரை உள்துறை செயலாளரிடம் கொடுக்கவும்
;-))

பரிசல்காரன் said...

//பிறகு இரண்டு வருடம் கழித்து ,கலெக்டர் பேர் உள்ள புகாரை உள்துறை செயலாளரிடம் கொடுக்கவும்
;-))//

அதற்கப்புறம் யாரிடமும் புகார் கொடுக்க வேண்டிவராது.

புகார் கொடுக்கறவர் இருந்தாதானே?

பட்டிக்காட்டான்.. said...

//.. நடை நல்லா வந்துருக்கு. ..//
நன்றி துளசி கோபால்..

//.. ஒரு கை பார்த்திடுவோம்..:))) ..//
எந்த கைய சகா..
நன்றி சகா..

//.. ஜோவியலா எழுத ஆரம்பிங்க.. கலக்கலாம்! ..//
கலக்கிரலாம்.

//.. ’ரெண்டு ஃப்ரெண்டுக ஒக்கார்ந்து பேசற ரயில்வே ஸ்டேஷன் எப்படி ஆளில்லாத ரயில்வே ஸ்டேஷனா இருக்க முடியும்?’ ..//
எப்படி இப்படி..??!!

//.. புகார் கொடுக்கறவர் இருந்தாதானே? ..//
ஏன் இப்படி..?
நன்றி பரிசல்..

//.. புகாராக எழுதி கலைக்டர் அலுவலகத்தில் ..//
தல இப்போ எங்ககிட்ட மனு கொடுத்ததற்கு எந்த ஆதாரமும் இல்ல.. :-(
நன்றி தல..

//.. உள்துறை செயலாளரிடம் கொடுக்கவும் ..//
ஐந்து நிமிடம் சிரித்துக்கொண்டு இருந்தேன்..
நன்றி Ganpat..

கும்க்கி said...

அய்யோ...அய்யோ...

டமில்நாட்டில் பைல் மூவ் பன்னக்கூட தெரியாத பட்டிக்காட்டானா இருக்கீங்களே.
சிரிப்பதா அழுவதா என்றே தெரியலை.

பட்டிக்காட்டான்.. said...

//.. பைல் மூவ் பன்னக்கூட தெரியாத பட்டிக்காட்டானா ..//
பைலவே காணோம்னு சொல்லுறேன், நீங்க என்னடானா முவ் பண்ண சொல்லுரிங்க..??!!
நன்றி கும்கி..

தமிழில் தட்டச்ச..

Google Indic Transliterator

உங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..


எங்க ஊர்காரங்க..