2010 இறுதியில் இணையப் பக்கம் வர முடியாத அளவுக்கு ஆணிகள் மற்றும் அலுவலகத்தில் ஏக கட்டுப்பாடு. இதில் ஈரோடு சங்கமமும் தவறிப் போனதில் நிறைய வருத்தம். நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்த நண்பர்களுக்கு வாழ்த்துகள். 2011 இனிமையாக பிறந்துள்ளது. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
கிட்டத்தட்ட இரண்டு மாசமா படிக்காமல் இருந்த பதிவுகளை ஓரளவுக்கு படிச்சாச்சு. வருஷம் பொறந்து பன்னண்டு நாளாகியும் இன்னும் கணக்கு தொடங்கவே இல்லையேனு ஒரே வெசனம். அதுதான் இந்த இடுகை. மத்தபடிக்கு வேற ஒன்னும் முக்கிமான விசயம் இல்லைங்க.
போதும் போதும்ங்கற அளவுக்கு நல்ல மழை. ஊர்ல இந்த வருஷம் கடலை ஓரளவுக்கு நல்ல விளைச்சல். மஞ்ச வெள்ளாமையும், வெலையும் நல்லாருக்கு. சோளத்தட்டு, கடலைகொடி எல்லாம் கொண்டுவந்து போர் போட்டாச்சு. தோட்டத்துல தண்ணி வந்தவுங்க எல்லாம் தோட்டத்து கடலைமு , போத்தாலைமு வெச்சாச்சு. வழக்கம் போலவே இந்த வருசமும் கூலி ஏறிப்போச்சு.
பக்கத்தூரு மாரியாத்தா கோயில்ல எல்லாம் கம்பம் போட்டு ஆட்டம் போட்டு முடுச்சுட்டாங்க. இனி வரிசையா தேர் நோம்பி வருது. கோபி, பாரியூர் அம்மன் தேரு வர்ற வியாழன் பூமிதி விழா, வெள்ளி தேரோட்டம், சனிக்கெழம முத்துப்பல்லாக்கு. அதே மாதிரி வெள்ளிக்கெழம காப்பு கட்டு நோம்பி, சனிக்கெழம பொங்கல் வருது. அதுக்கப்பறம் தை பூச தேரு, அப்புறம் உள்ளூரு அம்மன் தேருனு இந்த மாசமே ஒரே நோம்பிதான்.
ஊர் விழாக்களை நிழற்படங்களோடு பகிந்து கொள்கிறேன்..
7 கருத்துக்கள்..:
//மஞ்ச வெள்ளாமையும், வெலையும் நல்லாருக்கு. சோளத்தட்டு, கடலைகொடி எல்லாம் கொண்டுவந்து போர் போட்டாச்சு. தோட்டத்துல தண்ணி வந்தவுங்க எல்லாம் தோட்டத்து கடலைமு , போத்தாலைமு வெச்சாச்சு. வழக்கம் போலவே இந்த வருசமும் கூலி ஏறிப்போச்சு. //
எங்க ஊர்லயும் எல்லா கிணத்துலயும் தண்ணி வந்திடுச்சு !!
// இனி வரிசையா தேர் நோம்பி வருது. கோபி, பாரியூர் அம்மன் தேரு வர்ற வியாழன் பூமிதி விழா, வெள்ளி தேரோட்டம், சனிக்கெழம முத்துப்பல்லாக்கு. //
எங்க ஊர் திட்டமலை தேர் வருது ..!!
நோம்பி... வெள்ளாமைன்னு சொல்லி, ஏன்யா வயித்தெரிச்சலைக் கிளப்புறீரு?!
//கோபி, பாரியூர் அம்மன் தேரு வர்ற வியாழன் பூமிதி விழா, வெள்ளி தேரோட்டம், சனிக்கெழம முத்துப்பல்லாக்கு....ஊர் விழாக்களை நிழற்படங்களோடு பகிந்து கொள்கிறேன்..//
கண்டீப்பா தேர் நோம்பிய போட்டோவோட போடுங்க.. அதுவும் அந்த ராட்டன் தூரி, பாம்பே அப்பளம், கொண்டம், ஆத்தோர விநாயகர், முத்துப்பல்லாக்கு இதெல்லாம் போடுங்க; போகமுடீலீனாலும் பாத்தாச்சும் சந்தோஷப்பட்டுக்கறேன்.
//கூலி ஏறிப்போச்சு// - பேசாம சாப்ட்வேர் மக்கள் எல்லாம் வயல் கூலிக்கு போலாம், அந்தளவுக்கு இருக்கு கூலி.
நன்றி செல்வா..
//.. எங்க ஊர் திட்டமலை தேர் வருது ..!! ..//
இந்த வருசமும் நாடகம் நடக்குதா..??
நன்றிங்க பழம..
//.. ஏன்யா வயித்தெரிச்சலைக் கிளப்புறீரு?! ..//
ஹி.. ஹி.. அண்ணன் ஊர்ல இல்லையே, நாலு விஷயம் தெருஞ்சுக்கட்டுமேன்னுதான்..
நன்றிங்க பிரதீபா..
//.. பேசாம சாப்ட்வேர் மக்கள் எல்லாம் வயல் கூலிக்கு போலாம் ..//
அங்க AC இருக்காதுங்களே..!!
NC கேள்விப்பட்டிருக்கேன், அது என்னங்க AC ?
நான் Air-Conditioner அ சொன்னேங்க.. ஆமா அது என்ன NC?? :-(
தமிழில் தட்டச்ச..
உங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..