28 Jul 2010

சவாலை சமாளிக்க..

ஒரு  பெரிய மாற்றத்தை உருவாக்கும் சின்ன கதை. எனக்கு மின்னஞ்சலில் பகிரப்பட்ட ஒரு உற்சாக கதை.

கல்லூரி பேராசிரியர் ஒருவரது வகுப்பில்
பேராசிரியர் தனது கையில் கொஞ்சம் நீருடன் ஒரு கோப்பையை வைத்துள்ளார். மாணவர்கள் அனைவருக்கும் தெரியுமாறு தூக்கி பிடித்துக் கொண்டு, "இந்த கோப்பையில் உள்ள நீரின் அளவு என்ன?" என்று கேட்கிறார்.

50  மில்லி, 75  மில்லி, 100  மில்லி என பலவிதமான பதில்கள்.

Glass

 "இருக்கட்டும் எனக்கு இதன் அளவு முக்கியம் அல்ல" என்று கூறியவர், "நான் சொல்ல விரும்பும் விசயம், ஒரு சில நிமிடங்களுக்கு நான் இதை தூக்கி பிடித்திருந்ததால் என்னவாகும்?"
"ஒன்னும் ஆகாது".

"இதையே ஒருமணி நேரம் பிடித்திருந்தால்?"
"உங்க கை வலி எடுக்கும்" என்றனர் மாணவர்கள்.

"மிகவும் சரி, இதையே நாள் முழுவதும் வைத்திருந்தால்..??
"உங்களது கை அப்படியே மடங்கி விடும், தசை வலி ஏற்படுவதோடு பாரலிசிஸ் நோய்க்கும் ஆளாக நேரிடும்" என்று ஒரு மாணவன் சொல்ல மற்றவர்களும் ஆமோதித்தனர்..

"சரிஇந்த நேரத்தில் கோப்பையில்  உள்ள நீரின் அளவில் மாற்றம் ஏதுமிருக்குமா?" என்று கேட்டார்.
இருக்காது"..

"அப்படியானால்  எனது தசை வழிக்கு என்ன காரணமாக இருக்க முடியும்?"
மாணவர்கள் புரியாமல் பார்க்க, அவரே தொடர்ந்தார்..

"இப்போது இந்த வலியில் இருந்து மீள நான் என்ன செய்ய வேண்டும்?"
"அந்த கோப்பையை கீழ வைத்து விடுங்க.." என்றான் ஒரு மாணவன்.
"இதைத்தான் எதிர்பார்த்தேன்..!"

வாழ்க்கையில் பிரச்சனை என்பது இந்த கோப்பையில் உள்ள நீரைப் போலத்தான்.கொஞ்சநேரம் அதைப் பற்றி சிந்திப்பது தேவைதான்.

ஆனால் அதைப் பற்றியே நீண்ட நேரம் சிந்திப்பது தலைவலியை கொடுக்கும்.மேலும் அதைப் பற்றியே சிந்திப்பது, பாரலிசிஸ்யை கொண்டு வரும்.
அதற்கு மேல் நம்மால் ஏதும் செய்ய இயலாது.

வாழ்க்கையில் உள்ள தடைகளையும், பிரச்சனைகளையும் சிந்திப்பது மிகவும் அவசியம். ஆனால், அதைவிட முக்கியமானது நாள் முடிவில் தூங்கச் செல்லும் முன் அவற்றை தூக்கி எறிவது.

இதனால், அடுத்த நாள் சுறுசுறுப்பாக எழுந்து, நமது தடைகளை தகர்க்க முடியும். 
எனவே அலுவலகத்தில் இருந்து செல்லும் போது,
பிரச்சனை என்கிற கோப்பையை தூக்கி எறிந்து விட்டு செல்லுங்கள்..


Glass

7 கருத்துக்கள்..:

வால்பையன் said...

என் கோப்பையில் அடியில் ஓட்டை, நான் கீழே வைத்தே ஆகனுமா தல!?

Unknown said...

//.. என் கோப்பையில் அடியில் ஓட்டை ..//

நீங்க அவசியம் கோப்பைய மாத்தணும் தல. இல்லன உள்ள இருக்குற சரக்கு ஒழுகி போய்டும்(சரக்கு என்றால், தண்ணீர், பழரசம், இப்படி..).

செல்வா said...

நல்ல இருக்கு அண்ணா.. ஆனா நீண்ட நாளுக்கு அப்புறம் வந்திருக்கீங்க ..!!

vasu balaji said...

நல்ல பகிர்வு:)

Unknown said...

நன்றி செல்வா..
கொஞ்ச நாள் வேலை செய்யற மாதர நடிக்க வேண்டி இருந்தது. அதான்..

நன்றிங்க வானம்பாடிகள்..

ஈரோடு கதிர் said...

பயனுள்ள பகிர்வு திரு

Unknown said...

நன்றிங்க கதிர்..

தமிழில் தட்டச்ச..

Google Indic Transliterator

உங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..


எங்க ஊர்காரங்க..