27 May 2010

சும்மா தத்துவம் ஹி..ஹி..

1. ஒரே தவறை இருமுறை செய்யாதீர்கள். இன்னும் நிறைய வழிகள் உள்ளன, ஒவ்வொரு நாளும் புதுவிதமாக முயற்சி செய்யுங்கள்.

2. ஒருவரின் எண்ணங்களை மாற்ற சிறந்த வழி நமது எண்ணத்தை மாற்றிக்கொள்வது தான். ஒரே சூரியன்தான் வெண்ணையை உருக்கவும் களிமண்ணை கடினமாக்கவும் செய்கிறது.

3. வாழ்க்கை கடல் போன்றது. எல்லை இல்லாமல் போகிறது. எதுவும் நிலைப்பதில்லை. அலையைப்போல் நம் மனதை தொடும் ஒரு சிலரின் நினைவுகள் மட்டும் நம்மோடு.

4. என்றாவது நீங்கள் எவ்வளவு வசதியானவர் என்று தெரிந்து கொள்ள விரும்பினால், உங்களிடம் உள்ள பணத்தை எண்ணாதீர்கள். கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் விடுங்கள், எத்தனை கைகள் அதை துடைக்கிறதோ அதுதான் உங்களது உண்மையான வசதி.

5. இதயம் கண்களிடம் சொல்லுகிறது, குறைவாகப் பார் உன்னால் நான் அதிகமாக காயப் படுகிறேன் என்று. அதற்கு கண்களோ, நீ குறைவாக உணர்ச்சிவசப்படு அதனால் நான் தான் அதிகம் கண்ணீர் வடிக்கிறேன் என்கிறது.

6. மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள். ஏனென்றால் உங்களைத் தவிர வேறு யாரும் உங்களைப்போல் வாழ முடியாது. நீங்கள் என்னவாக உள்ளீர்களோ அதுதான் சிறந்தது.

7. புதிதாக பறந்து பழகிய கொசு திரும்பியவுடன் அம்மா கொசு கேட்டது. "இன்றைய நாள் எப்படி இருந்தது?". பதில் "அருமையான நாள் இது, ஒவ்வொருவரும் எனக்காக கை தட்டினார்கள்..!!".

13 கருத்துக்கள்..:

vasu balaji said...

7 சூப்பர்:)).

அகல்விளக்கு said...

சூப்பர்...

அ.முத்து பிரகாஷ் said...

அனைத்தும் அருமை தோழர் ...
மொக்கை என்று எதையுமே சொல்ல முடியாது ...
அனைத்தும் தத்துவ முத்துக்கள் ...
வருகிறேன் திரு!

YUVARAJ S said...

http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html

Your comments are highly appreciated. Thanks

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நல்லா இருக்குங்க.. நீங்க கொஞ்சம் பின்னால பொறந்துட்டீங்க..அரிஸ்டாட்டில்,சாக்ரடீஸ் காலத்தில பொறந்திருந்திருந்தீங்கன்னா,அவங்கள்ளாம், துண்டைக் காணொம், துணியைக் காணோம்னு ஓடிப் போயிருப்பாங்க!!

Unknown said...

நன்றி வானம்பாடிகள்..
நன்றி அகல்விளக்கு..
நன்றி நியோ..
நன்றி YUVARAJ S..
நன்றி ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி..

வரதராஜலு .பூ said...

:)

Unknown said...

நன்றி வரதராஜலு .பூ..

goma said...

அருமையான அறிவுரைகள்.

முனைவர் இரா.குணசீலன் said...

என்ன தத்துவம்?
என்ன தத்துவம்?

அசந்து போய்ட்டேன் நண்பா..

Unknown said...

நன்றி goma..
நன்றி முனைவரே..

முனைவர் இரா.குணசீலன் said...

5. இதயம் கண்களிடம் சொல்லுகிறது, குறைவாகப் பார் உன்னால் நான் அதிகமாக காயப் படுகிறேன் என்று. அதற்கு கண்களோ, நீ குறைவாக உணர்ச்சிவசப்படு அதனால் நான் தான் அதிகம் கண்ணீர் வடிக்கிறேன் என்கிறது.



அருமை நண்பா.

Unknown said...

//.. அருமை நண்பா...//

மீள் வருகைக்கு நன்றி நண்பரே..

தமிழில் தட்டச்ச..

Google Indic Transliterator

உங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..


எங்க ஊர்காரங்க..