5 Mar 2010

செல்பேசி எண் மாற்றத் தேவையில்லா வசதி (Mobile Number Portability)

செல்பேசி எண்ணை மாற்றாமலே நமக்கு சேவையளிக்கும் நிறுவனத்தை மாற்றும் வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது புலி வருது கதையாகவே இருக்குது.

இந்த மாதிரி ஒரு வசதி வருதுனு சொன்னவுடனே, ஆகா இனிமேல் செல்பேசி எண்ண மாத்தறதுக்கு பயந்துட்டு நல்ல வசதி கொடுக்கற சேவையாளருக்கு மாத்திக்க பயப்படத் தேவையில்லைன்னு நினைச்சோம். ஆனா, இப்போ அந்த வசதிய ஏதாவது ஒரு காரணம் சொல்லி தள்ளிப் போட்டுட்டே இருக்காங்க.

அநேகமாக கடந்த நடுவணரசில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இதுவென்று நினைக்கிறேன். முதல் தவணை நாளாக டிசம்பர் 31, 2009 அறிவிக்கப்பட்டது. பிறகு சேவை நிறுவனங்கள் உள்கட்டமைப்பு செய்ய கால அவகாசம் கேட்டன. பிறகு அரசு நிறுவனங்கள் BSNL மற்றும் MTNL உள்கட்டமைப்பு வேலை காரணமாக அது மீண்டும் மார்ச் 31, 2010 க்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டது.

இப்போது இந்த சேவையை வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றான "US-based Telcordia Technologies" பாதுகாப்பு வேலைகளை சரிவர செய்ய வேண்டும் என்பதற்காக மேலும் இரண்டு மாதங்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதாவது மே மாத இறுதியில் இது பயன்பாட்டுக்கு வரும் என்கிறார்கள்.(வருமா?)

இந்தியா முழுவதும் இந்த வசதிய அறிமுகப்படுத்த இரு நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கி இருக்காங்களாம். ஒன்னு"US-based Telcordia Technologies" இன்னொன்னு "Syniverse Technologies". அடுத்தது இவங்கனால ரண்டு மாசம் தள்ளிப்போடப் போறாங்களா?


என்னதான் நடக்குது அங்க..

7 கருத்துக்கள்..:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இந்த வசதி வந்தால் நல்லதுதான் நான் முதல்ல ரிலையன்ஸ்ல இருந்து மாறிடுவேன்.

vasu balaji said...

வந்தா பார்க்கலாம்:)

அண்ணாமலையான் said...

வந்தா வரவேற்போம்

வால்பையன் said...

வந்தா எனக்கும் சந்தோசம் தான்!

thiyaa said...

பார்க்கலாம்.....பார்க்கலாம்

Unknown said...

வரும் ஆனா வராது.....

Unknown said...

@ஸ்ரீ
@வானம்பாடிகள்
@அண்ணாமலையான்
@வால்பையன்
@தியாவின் பேனா
@பிரபு

அனைவருக்கும் நன்றி..

இந்த வசதி வருமான்னு தான் நானும் அடிக்கடி கூகிள் கிட்ட கேட்டுட்டே இருக்கேன்.. :-D)

தமிழில் தட்டச்ச..

Google Indic Transliterator

உங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..


எங்க ஊர்காரங்க..