16 Sept 2010

கோப்பையா? காபியா?

எனக்கு மின்னசலில் பகிரப்பட்ட ஒரு வாழ்க்கை தகவல்(தத்துவம்!).

நல்ல வேலை கிடைத்து வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்திருந்த மாணவர்கள் சிலர் தங்களது கல்லூரி பேராசிரியரைச் சந்தித்தனர். பழைய கதைகளைப் பேசிக் கொண்டுருந்த அவர்களின் பேச்சு தங்கள் சார்ந்திருந்த வேலையினால் உண்டாகும் மன அழுத்தத்தையும் அதனால் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சலிப்பையும் பற்றி திரும்பியது.

விருந்தினர்களை உபசரிக்க காபி எடுத்துவரச் சென்றார் பேராசிரியர். ஒரு பெரிய பாத்திரத்தில் காபியும் சில கோப்பைகளையும் எடுத்துவந்தார். அதில் கிளாஸ், பிளாஸ்டிக், கிரிஸ்டல், விலையுயர்ந்த, சாதாரணமான, வெள்ளி மற்றும் தங்கத்தில் செய்யப்பட்ட கோப்பைகள் கலந்து கிடந்தன. ஆளுக்கொரு கோப்பையில் காபியை அவர்களே எடுத்துக்கொள்ளுமாறு பேராசிரியர் பணிந்தார்.

மாணவர்கள் காபியுடன் அமர்ந்ததும், பேராசிரியர் பேச ஆரம்பித்தார்.

நன்றாக கவனித்தீர்களானால், விலையுயர்ந்த மற்றும் பார்வைக்கு அழகான கோப்பைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ளவை சாதாரண மலிவாக கிடைக்கக் கூடிய கோப்பைகள் மட்டுமே. இந்த மனநிலைதான் உங்களின் அனைத்து துன்பம் மற்றும் மன அழுத்ததிற்கு காரணம். உண்மையிலேயே உங்களுக்கு தேவை கோப்பையா? அல்லது காபியா? ஆனால் நீங்கள் அனைவரும் மற்றவர்களின் கோப்பையை விட உங்களது கோப்பை நன்றாக இருக்கவேண்டுமென்று தான் நினைத்தீர்கள்.

இங்கே வாழ்க்கையை காபியாக கருதினால், வேலை, பணம், அந்தஸ்து ஆகியவை கோப்பைகளைப் போன்றது. அந்த கோப்பைகளெல்லாம்  உங்களது வாழ்க்கையை தூக்கி பிடிக்கும். ஆனால் வாழ்க்கை மாறாமல் அப்படியேதான் இருக்கும். கோப்பையை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தால் சிலசமயம் வாழ்க்கையை இழக்க நேரிடும்.

காபி அருந்த கோப்பை அவசியம்தான். அது எந்த கோப்பை என்பது, அவரவர் மனநிலையில் உள்ளது. கோப்பையை தேடி அலையாமல், காபியை மகிழ்வாக அருந்துங்கள்.

நமது கோப்பையை நாம்தான் முடிவு செய்யவேண்டும்.

8 கருத்துக்கள்..:

செல்வா said...

நான்தான் முதல் ..!!

செல்வா said...

//நமது கோப்பையை நாம்தான் முடிவு செய்யவேண்டும்//

செம கதைதான். ஆனா இங்க கோப்பைக்காகத்தானே சிலர் வாழுறாங்க ..!!

Unknown said...

ஆமாம் செல்வா. ஈயக்குவளை போதும் என்று நினைப்பவன் கேனயனாக பார்க்கப்படுகிறான் இங்கே.

sathishsangkavi.blogspot.com said...

//ஈயக்குவளை போதும் என்று நினைப்பவன் கேனயனாக பார்க்கப்படுகிறான் இங்கே//

உண்மை தான்....

vasu balaji said...

நல்ல பகிர்வு சம்பத்:)

அப்பாதுரை said...

அருமை

Unknown said...

நன்றிங்க சங்கவி..
நன்றிங்க வானம்பாடிகள்..
நன்றிங்க அப்பாதுரை..

Unknown said...

ஏழுகடல் தாண்டி, ஏழு மலைத் தாண்டி போனால் தான் முடியும் என்ற ரீதியில் எங்களை பயமுறுத்தினார்கள்... வலைப்பூ-வை உருவாக்க வேண்டும் என துவங்கியப்போது. இருந்தபோதிலும் மிக எளிது என நம்பிக்கையூட்டிய "நண்பேன்டா"களின் உதவியால் இன்று bharathbharathi.blogspot.com என்ற தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.

தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம். இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. மேலும் ஆலோசனைகளைத் தாருங்கள்.

இந்த வலைப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்க. இது சின்னஞ்சிறு மனிதர்களின் உலகம். தவறுகளை புறக்கணித்து வாழ்த்துங்கள்.. கருத்துரைகளை ஆவலாய் எதிர் நோக்குகிறோம்..

வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...

நன்றி..

அன்புடன்...
பாரத்பாரதி-க்காக

எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...

தமிழில் தட்டச்ச..

Google Indic Transliterator

உங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..


எங்க ஊர்காரங்க..