27 Aug 2010

அய்யா கொஞ்சம் தண்ணி குடுங்கையா..??

நண்பர் சங்கவிக்கு இங்க பின்னூட்டம் போட போயி, அது கொஞ்சம் பெருசா போனதால இடுகையாகவே போட்டுட்டேன்.

சங்கவி சொல்லுறது எல்லாம் சரிதான். உங்களுக்கு என்ன(பவானி) இந்தப் பக்கம் காவேரி, அந்தப் பக்கம் பவானினு ஓடுது. கோபில கூட LBP ஓடுது. பொள்ளாச்சி, உடுமலைப் பக்கம் சொல்லவே வேணாம். திருப்பூர்ல நொய்யல் இருந்துச்சு, அதுவும் இப்போ நோயால் வாடுது. ஆனா எங்க நிலமைய யோசிச்சு பார்த்திங்களா..?


திருப்பூருக்கு வடக்க, குன்னத்தூர், கொளப்பலூர் தாண்டி கோபிக்கு ஏழு கிலோமீட்டர் முன்னாடி வரைக்கும் வானம் பார்த்த பூமிதான். அதே மாதிரி மேக்க புளியம்பட்டில இருந்து நம்பியூர், செவியூர், திங்களூர் வரைக்கும் இதே நிலைமைதான். இத்தனைக்கும் வடக்கத்துக்காரங்கள(தோள்ல பச்ச துண்ட போட்டுக்கிட்டு டீஸல் புல்லட் ஒட்டுறதுதான் அவங்க வேல) விட நாங்க கடுமையான உழைப்பாளிகள் தான்.

நாங்களும் விடாம பதினஞ்சு இருபது வருசமா அவினாசி - அத்திக்கடவு திட்டத்துக்காக நடையா நடக்கிறோம். ஆனா அறிவிப்பு மட்டும் வருது செயல்ல ஒன்னையும் காணோம். இதோ இப்போ கூட செம்மொழி மாநாட்டுல அறிவிப்பாங்கனு வாய தொறந்து பார்த்துட்டு இருந்ததுதான் மிச்சம்.

இத்தனைக்கும் நாங்க ஒன்னும் புது வாய்க்காலோ, ஆத்த திருப்பி விடச் சொல்லியோ கேட்கல. இருக்குற பள்ள வாரியத்த தூர் வாரி குளம் குட்டைகளுக்கு தண்ணி விட்டா மட்டும் போதும். கிணறு, போர்வெல் எல்லாம் பதம் புடிச்சுக்கும். இப்போ 1500 அடில கூட தண்ணி இருக்காது போல. போன மாசம் எங்க பக்கத்து தோட்டத்துல 1300 ல ஒன்னு 1400 ல ஒண்ணுனு ரண்டு போர் போட்டு அஞ்சு லட்ச ரூபா போனது தான் மிச்சம். இத்தன வருஷம் கழிச்சு மஞ்சள் நல்ல விலைக்கு வித்து, அந்த காச கொண்டு போயி குழில போட்டாச்சு. இதுக்கு மேல என்ன பண்ண?

இந்த கருமத்த நம்பி ஒன்னும் பண்ண முடியாதுன்னு பாதி பேரு திருப்பூர் கம்பனிக்காரங்களுக்கு காட்ட வித்து போட்டு அதே கம்பனில கூலி வேலைக்கு போயிட்டு இருக்காங்க. சொன்ன நம்ப மாட்டிங்க, எங்க பங்காளி ஒருத்தரு தோட்டத்த வித்து போட்டு என்ன பண்ணறதுன்னு சொல்லிட்டு கம்பெனிக்கு விக்காம அதுல விவசாயம் பார்த்தாரு. ஒரே வருசத்துல கெணரும் காஞ்சு, குழியும் வத்திப் போச்சு. இப்போ அதே கம்பெனிக்கு கணக்கு எழுத போறாரு(நல்ல வேல பி.யு.சி. வரைக்கும் படிச்சு இருந்தாரு)

விவசாயம் பண்ணி பொழச்சுக்கலாம்னு படிக்காம, இந்த காட்டையே நம்பினவுங்க எல்லாம் வேற வழியே இல்லாம கூலி வேலைக்குதான் போயிட்டு இருக்காங்க. இலவச மின்சாரம் வாங்குற போராட்டத்துல மூணு பேரு செத்து போனாங்களே(இப்போ அரசியல் பண்ணுறதுக்கு உதவுறாங்க) ஞாபகம் இருக்கா? அதுல ஒருத்தரு எனக்கு தாத்தா முறை. அவரோட தோட்டமும் இந்த காஞ்சு போன பகுதிக்குள்ள தான் வருது. அவருக்கு(மத்த ரண்டு பேருக்கும் தான்) நன்றி செலுத்த வேண்டியாவது இந்த அவினாசி - அத்திக்கடவு திட்டத்த நிறைவேத்தலாம்.

ஆனா அவங்க இறந்த நாள் அன்னைக்கு பெருமானல்லூர்ல பெருசா ஒரு ப்ளெக்ஸ் வெச்சு அதுல சிறுசா அவங்க போட்டோவும், பேரும் மட்டும்(மத்ததெல்லாம் என்னான்னு கேட்கறிங்களா..??) இந்த ரண்டு வருசமா வெக்கறாங்க. கேட்டா கொங்கு நாட்ட தூக்கி நிறுத்தப் போறேன்னு சொல்றாங்க..??

இப்படி விவசாயம் பண்ண திறமை இருந்தும், ஆர்வம் இருந்தும் வேற வழி இல்லாம(ஆனா, வலி இருக்கு..) திருப்பூர் கம்பெனிக்கும், வீட்டு மனைக்கும் காடு தோட்டத்த வித்துட்டு இருக்கோம். இதுவரைக்கும் யாராவது எங்களுக்காக கவலைப்பட்டு இருக்கிங்களா?? ஆனா, நாங்க காட்ட வித்து போடறோம்னு மட்டும் வருத்தப்படுறிங்க. எங்களுக்கான வசதிகள் இருந்தும் நாங்க விவசாயம் செய்ய மறுத்தா, செருப்ப கழட்டி அடிங்க. ஆனா ஒண்ணுமே இல்லாம வெறும் கைல மொழம் போட எங்களால முடியாதுங்க.

10 கருத்துக்கள்..:

sathishsangkavi.blogspot.com said...

சார் நான் காட்ட விக்கறபத்தி பேசினேன். என்ன காடு முப்போகம் விளையும் விவசாய பூமிகளை சொல்கிறேன்... காவிரி, பவானியை ஆறு பாயும் ஏரியாவில் நிலத்தை வீட்டுமனைக்கு விற்காம ஒழுங்கா விவசாயம் செய்தால் தமிழ்நாட்டுக்கே சோறு போடலாம். உங்களைப்போல் ஆற்றுப்பாசனம் இல்லாதவர்கள் கிணற்றுப்பாசனத்திற்கு முயற்சிக்கலாம் பாசனமே இல்லை என்றால் உங்களால் விவசாயம் செய்ய முடியாது ஒத்துக்கிறேன். பனியன் கம்பெனிக்காரனுக்கு நீங்க சும்மாவா நிலத்தை வித்தீங்க... எங்க ஏரியா முப்போகம் விளையும் ஏரியா அங்க ஒரு ஏக்கர் 2 லட்சத்திற்குதான் போகுது... ஆனா உங்க ஏரியாவில் ஒரு ஏக்கர் எவ்வளவுக்கு போகுது என உங்களுக்கே தெரியும்... நான் சொல்ல வந்த விவசாயம் பவானி, காவிரி மற்றும் தமிழகமெங்கும் ஆற்றுப்பாசனம், கிணற்றுப்பசானம், ஏரிப்பாசனம் உள்ள இடங்களை விற்காமல் விவசாயம் செய்யுங்கள்.... இல்லாத தண்ணிக்கு நீங்க மட்டும் எங்க சார் போவீங்க....

செல்வா said...

அட நான் தான் முதல் போல ..!! இருங்க படிச்சிட்டு வரேன் ..

செல்வா said...

நம்ம ஊரோட நிலைமைய அழகா சொல்லிருக்கீங்க அண்ணா.. எங்க ஊர்லயும் ஒருத்தர் போர் போடுறேன்னு போட்டு 1050 அடி ஓட்டினார்.. ஆனா தண்ணி இல்ல. என்ன பண்ணுவார்..?

Unknown said...

@@ செல்வா..

வாடி செல்லம், இது உன் சார்பாகவும் தான் சொல்லி இருக்கேன். உன்னோட பங்குக்கு கருத்துகள போட்டு கும்மு..

Unknown said...

@@ சங்கவி..

நான் அதுதான் சொல்லுறேன், விக்கறவன விட்டுடுங்க, எங்களுக்கு வசதி செஞ்சு கொடுங்க நாங்க விவசாயம் பண்ணுறோம்..

Unknown said...

செல்வா, நிலத்தடி மட்டம் காஞ்சு போயி கிடக்கு, அப்புறம் 2000 அடி போர் போட்டாலும் தண்ணி வராது..

செல்வா said...

///பனியன் கம்பெனிக்காரனுக்கு நீங்க சும்மாவா நிலத்தை வித்தீங்க... எங்க ஏரியா முப்போகம் விளையும் ஏரியா அங்க ஒரு ஏக்கர் 2 லட்சத்திற்குதான் போகுது... ஆனா உங்க ஏரியாவில் ஒரு ஏக்கர் எவ்வளவுக்கு போகுது என உங்களுக்கே தெரியும்..///
அட அதிக விலைக்குத்தாங்க விக்குது..
தண்ணி இல்லைங்கறதுக்காக சும்மாவா தரமுடியும். அதே மாதிரி நீங்க சொல்லுறதிலையும் நியாயம் இருக்குதுங்க .. இப்ப போயிட்டிருக்கிற நிலையப் பார்த்தா ரொம்ப பயமாத்தான் இருக்கு. ஏன்னா இங்க இருக்குற நிலத்தஎல்லாம் வாங்கி பிளாட் போடுறேன் அப்படின்னு போட்டு எதுக்குமே பயன்படாத மாதிரி மாத்திட்டிருக்காங்க. ஆனா அதுலயும் ஒரு நல்ல விஷயம் என்னன்னா மாடு மேய்க்கலாம் , ஆடு மேய்க்கலாம் அப்புறம் எங்களுக்குப் பக்கத்துல இருக்குற பிளாட்ல தான் நாங்க கிரிக்கெட் விளையாடுறோம். விவசாய நிலத்துல கிரிக்கெட் காலம் எப்படி போகுது பாருங்க ..!!

ஈரோடு கதிர் said...

அத்தனையும் வலியோடு ஒத்துக்கொள்கிறேன் திரு.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

படித்து முடித்ததும் வலித்தது..
கண்களும்..மனதும்...!!

Unknown said...

நன்றிங்க ஈரோடு கதிர்..
ஒரு நல்ல தீர்வு சொல்லுங்க..

நன்றிங்க ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி..

தமிழில் தட்டச்ச..

Google Indic Transliterator

உங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..


எங்க ஊர்காரங்க..