24 Feb 2010

சச்சினின் புதிய உலக சாதனை
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் உலக சாதனை படைத்தார்.

1997 ல் சஹீத் அன்வர் எடுத்த 194 ஓட்டங்களே இதுவரை ஒரு நாள் போட்டிகளில் ஒரு வீரரின் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. கிரிகெட் உலகின் ஜாம்பவான் என்று செல்லமாக அழைக்கப்படும் இந்திய வீரர் சச்சின் இன்று அந்த சாதனையை முறியடித்து தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியாவில் நடக்கும் ஒருநாள் ஆட்டத்தில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

வாழ்த்துகள் சச்சின்..

9 Feb 2010

கூகுளின் மற்றுமொரு தேடல் இயந்திரம்(நல்ல பயன்பாட்டுடன்..)

கூகிள் நிறுவனத்திலிருந்து மற்றுமொரு தேடல் இயந்திரம். ஆனால் இதன் பயன்பாடோ முற்றிலும் உபயோகமானது.

கூகிள் உதவியுடன் ஒரு புதிய தேடல் இயந்திரம் (Cocodle.com ) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேடல் இயந்திரத்தை நாம் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் ஒரு குறிப்பிட தொகை, சமுதாயத்தில் பின்தங்கியுள்ள குழந்தைகளின் வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும்.

இந்த வலைத்தளத்தை உபயோகபடுத்தினால், கூகுளின் அதே துல்லியத்துடனும் முடிவுகள் இருக்குமென்று உறுதியளிக்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் குறைவாக இருந்தாலும், உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அதிக அளவிலான உதவிகளை உலகம் முழுவதும் விரிவடையச்செய்யும்.

இந்த வலைத்தளத்தை வடிவமைப்பதில் நாங்கள் முனைப்பாக உள்ளோம் எனவும், அதன் மூலம் அக்குழந்தைகளுக்கு உதவ உபயோகிப்பாளர்களது உதவி மிகவும் தேவைப்படும் எனவும் கூறுகின்றனர். பண உதவியோ பொருள் உதவியோ எதிர்பாராமல் இந்த தேடல் இயந்திரத்தை மட்டும் நமது பயன்பாடுகளுக்காக உபயோகப்படுத்த சொல்லுகிறார்கள்.

இந்த அமைப்பின் முக்கிய செயல்பாடுகளாக பின்தங்கியுள்ள குழந்தைகளின் கல்வி மற்றும் உடல்நலத்தை மேம்படுத்துவதாக கூறுகின்றனர். இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களுக்கு உதவுவதன் மூலம் தங்களது சேவையை ஆரம்பம் செய்வதாக உள்ளனர்.இது தொடர்பான செயல்பாடுகளை தங்களது வலைப்பூவில் பதிவேற்றம் செய்யவுள்ளனர்.

இதுகுறித்தான ஆலோசனைகள் மற்றும் தொடர்புகளுக்கு, cocodle.support@gmail.com மற்றும் http://www.cocodle.com/en/contact.htm.


தமிழ்மணம் மற்றும் தமிழிஷில் வாக்களித்து அதிக மக்களை சென்றடையச்செய்யுங்கள்..

5 Feb 2010

இலவச பிளாஸ்டிக் சர்ஜரி

இலவசமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பு.

தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொடைக்கானல் பாசம் மருத்துவமனையில் வருகின்ற 2010, மார்ச் 23 முதல் ஏப்ரல் 4 ம் தேதி வரை ஜெர்மன் மருத்துவர்களால் இலவச பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படுகிறது.

தீக்காயம் பட்டவர்களோ, பிறப்பால் பிரச்னைக்கு உள்ளானவர்களோ மேலும் காது, மூக்கு மற்றும் வாய் போன்றவை ஒட்டி இருப்பதால் பிரச்னைக்கு உள்ளானவர்களோ இங்கு இலவசமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாம்.


தொடர்பு கொள்ள:

M.M. வீதி, கொடைக்கானல் என்ற முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது (04542) 240778 மற்றும் 240668 தொலைபேசி எண்களில் அழைத்தோ பதிவு செய்துகொள்ளலாம்.

அல்லது pasam.vision@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.4 Feb 2010

கோவை நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்

கூட்ட நெரிசலை தவிர்க்க தென்னக ரயில்வே இரண்டு சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

இன்று (04-02-2010)முதல் முன்பதிவு தொடங்குகிறது.

ரயில்களின் விவரம்:

1. சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் – சென்னை சென்ட்ரல்

ரயில் எண்: 0621 சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் 22.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். இந்த ரயில் 5.2.2010 முதல் 26.3.2010 வரை அனைத்து வெள்ளிகிழமைகளிலும் ஓடும்.

ரயில் எண்: 0622 கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் 23.55 மணிக்கு கோயம்பத்தூரில் இருந்து புறப்படும். இந்த ரயில் 7.2.2010 முதல் 28.3.2010 வரை அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் ஓடும்.

இந்த ரெயிலில் 2 முதல் வகுப்பு, 1 மூன்றாம் வகுப்பு (குளிர்சாதன வசதி), 8 இரண்டாம் வகுப்பு படுக்கை, 4 பொது வகுப்பு பெட்டிகள் உள்ளன.

ரயில் நின்று செல்லும் இடங்கள்: காட்பாடி, ஜோலார்பேட்டை , சேலம், ஈரோடு, மற்றும் திருப்பூர்.

2. சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல்

ரயில் எண்: 0601 சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் 20.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். இந்த ரயில் 5.2.2010 முதல் 26.3.2010 வரை அனைத்து வெள்ளிகிழமைகளிலும் ஓடும்.

ரயில் எண்: 0602 நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் 16.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும். இந்த ரயில் 6.2.2010 முதல் 27.3.2010 வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் ஓடும்.

இந்த ரயிலில் 2 இரண்டாம் வகுப்பு (குளிர்சாதன வசதி), 2 மூன்றாம் வகுப்பு (குளிர்சாதன வசதி), 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் உள்ளன.

ரயில் நின்று செல்லும் இடங்கள்: காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர்.

2 Feb 2010

புதிய ரயில் முன் பதிவு வலைப்பக்கம்

இந்திய ரயில்வே துறையின் வலைப்பக்கமான irctc.co.in தற்பொழுது புதுப்பொலிவு பெற்றுள்ளது. இதன் முகப்பு பக்கத்தில் உள்ள "Try new Interface- Beta" வை சுட்டினால் புதிய வலை திறக்கிறது.
பிறகு வழக்கம் போல பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கொடுத்து நமது கணக்கிற்குள் சென்றால் புதிய பக்கம் திறக்கிறது. அதில் புறப்படும் இடம், சேரும் இடம் பயண நாள் போன்ற விபரங்களை கொடுத்தால் அன்றைய நாளுக்கான ரயில்களின் பட்டியலை கொடுக்கிறது. மேலும் குறிப்பிட்ட ரயிலில் எந்த வகுப்பு வசதி உள்ளது என்பதையும் காட்டுகிறது.தேவையான ரயிலின் விருப்பமான வகுப்பை சுட்டினால் அடுத்த ஆறு நாட்களுக்கான இருப்பு விபரத்தையும், பயணத் தொகையையும் காட்டுகிறது. அதில் உள்ள "Book link" ஐ சுட்டி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

புதிய வசதியை உபயோகித்து எளிதாக முன்பதிவு செய்யுங்கள்.


எங்க ஊர்காரங்க..