12 Aug 2010

யாருக்காவது ராமாயணம் தெரியுமா..??

பள்ளிக்கூடத்துல படிக்கும் போது யாரோ சொன்ன கதை..

ஒரு  முனிவர் ஒருத்தரு வழில போயிட்டு இருக்கும்போது, எதுக்கால இன்னொரு முனிவரு கால இழுத்துகிட்டே வந்தாராம். ஏப்பா என்ன ஆச்சுன்னு இவரு கேட்க,

    "முக்காலைகொண்டு மூவிரண்டைக் கடக்கயிலே ஐந்து தலை நாகமொன்று ஆளக் கடந்ததுவே.." அப்படின்னாராம்.


அதுக்கு இவரு,
    "பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் காலை வாங்கித் தேய்.." அப்படின்னு சொன்னாராம்.

இதுக்கு என்ன விளக்கம்னா..??

முதலாமவர்: வயதாகிவிட்டதால் கையில் குச்சியுடன் ஆற்றைக் கடந்து வரும்போது நெருஞ்சி முள் ஒன்று காலில் குத்தி விட்டதாம்..

இரண்டாமவர்:
பத்து தரன் - தசரதன்
புத்திரன் - மகன் (ராமன்)
மித்திரனின் - நண்பன்(ராமனின் நண்பன் சுக்ரீவன்)
சத்துருவின் - எதிரி(சுக்ரீவனின் எதிரி வாலி)
பத்தினியின் - மனைவி(வாலியின் மனைவி தாரை)
தாரைல காலை வாங்கினா தரை (ஸ்ஸ்ஸ்ஸப்பா....)

ஒன்னுமில்லைங்க தரைல காலத் தேய்னு சொல்லுறாரு..

இத எழுதும்போது ராமனின் நண்பன் சுக்ரீவனா? வாலியா? னு சந்தேகம் வந்துச்சு. சரின்னு  கூகுள்ல தேடித் பார்த்தா, ஏற்கனவே ஒரு நண்பர் இங்க இதப் பத்தி இடுகை போட்டு இருக்கார். இருந்தாலும் நாம முன்ன வெச்ச கால பின்னாடி வெக்கக் கூடாதுன்னு நானும் இந்த இடுகைய போட்டுட்டேன்..

7 கருத்துக்கள்..:

priyamudanprabu said...

தாரை -- இது ஒரு பூ என்று நினைக்கிறன்

செல்வா said...

///ஒன்னுமில்லைங்க தரைல காலத் தேய்னு சொல்லுறாரு.///
இதைய சாதாரணமாவே சொல்லிட்டு போகலாம்ல ..!!
ஏன் இப்படி சொல்லிக்கிட்டு .!!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நல்லா இருக்கு !!

எஸ்.கே said...

பள்ளியில் படிக்கும்போது இதை கேள்விப்பட்டிருக்கிறேன்!

Unknown said...

நன்றிங்க பிரியமுடன் பிரபு..

நன்றி செல்வா..

நன்றிங்க ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி..

நன்றிங்க எஸ்.கே..

வால்பையன் said...

//ஒரு முனிவர் ஒருத்தரு வழில போட்டு இருக்கும்போது,//

அசிங்கமா பேசாதிங்க தல, அது போய்கிட்டு இருக்கும் போது!

Unknown said...

@ வால்,

இப்போ சரியா..??!! (என்னா வில்லத்தனம்..)

தமிழில் தட்டச்ச..

Google Indic Transliterator

உங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..


எங்க ஊர்காரங்க..