11 Aug 2010

அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா தேவையா(ஒரு கண்ணீர் கதை)..??

சில வாரங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு தலைப்பு "அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா அவசியமா?". அப்படி ஒரு வசதி என்னோட அலுவலகத்துல இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்னு எனக்கு இப்போ தோணுது.

ஒரு வெள்ளிக்கிழமை என்னோட கணினியை நிறுத்திட்டு போன நான், திங்கள்கிழமை வந்து பட்டன அமுக்கினா, குய் குய் னு மூணு சத்தம் வந்துச்சு. நானும் நாலஞ்சு தடவ முயற்சி செஞ்சு பார்த்துட்டு, பழுது நீக்குரவங்களுக்கு தகவல் சொன்னேன். ஒருத்தர் வந்து பார்த்துட்டு இது மென்பொருள் பிரச்சினை இல்ல, வன்பொருள் சரி செய்யுறவர கூப்பிட்டு கேளுங்கன்னு சொன்னாரு. அவரு வந்து பார்த்துட்டு தம்பி RAM  எங்கப்பான்னு கேட்டாரு.. "இந்திராகாந்திய சுட்டுட்டாங்களாங்கற" ரேஞ்சுக்கு என்னது RAM அ காணோமான்னு கேட்டேன்.

ஆமாப்பா ன்னு சொன்னாரு. சரி நான் இப்போ என்னங்க பண்ணனும்னு கேட்டதுக்கு, ஸ்டோர்ல போயி கேளுப்பான்னு சொன்னாரு. அங்க போயி கேட்டா, இது ஸ்டோர் மட்டும்தான். நாங்க RAM எல்லாம் தரமாட்டோம். Access Control  க்கும், செக்யூரிட்டிக்கும் சொல்லிட்டு உங்க மேனேஜருக்கு ஒரு மெயில் அனுப்புனு பதில் வந்துச்சு. அவருக்கு மெயில் அனுப்பினா, செக்யூரிட்டி கிட்ட இருந்து ஒரு மெயில் வாங்கி அனுப்ப சொன்னாரு.

எல்லாம் மெய்லும் அனுப்பி அவரு கம்பெனி கிட்ட RAM கேட்டு ஒரு விண்ணப்பம் போட்டாரு. அதுக்கு அந்த தம்பி கிட்ட ரண்டு கம்ப்யூட்டர் இருக்கு, அதுல ஒன்ன ஸ்டோர்ல திருப்பி தரச் சொல்லுங்கன்னு ஒரு பதில் வந்துது. ஒரு கம்ப்யூட்டர்க்கே வேலைய காணோமாம்னு நினச்சுட்டு இருங்க பார்த்து சொல்லறேன்னு சொன்னேன்.

அப்புறம் பார்த்தா அத நான் திருப்பி கொடுத்து ஒரு வருசத்துக்கும் மேல ஆகி இருந்தது.  அய்யா அத நான் திருப்பி கொடுத்து ஒரு வருசமாச்சுன்னு சொல்லி, அங்க இங்க பேசி ஒருவழியா புது RAM வாங்கறதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்குதே, அத சொல்லி மாள முடியாதுங்க.

இப்போ விசயத்துக்கு வர்றேன். கண்காணிப்பு கேமரா இருந்துருந்தா, செக்யூரிட்டியோட என்னோட வேலை முடிஞ்சுருக்கும். இத்தன துன்பம் இருந்துருக்காது. இத்தன துன்பத்துலயும் ஒரு மகிழ்ச்சி என்னன்னா எப்படியோ ஒரு இடுகை தேத்தியாச்சு. :-))

8 கருத்துக்கள்..:

துளசி கோபால் said...

மேட்டரு சிக்குனதுதான் மேட்டரா!!!!!!

vasu balaji said...

athu sari:)

வால்பையன் said...

தக்காளி வாங்குற சம்பளம் பத்தாதுன்னு ரேமை வேற கழட்டிட்டு போறானுங்களா!?

கம்பியூட்டருக்கு பெரிய திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டிட்டு போங்க வெளியே!

sathishsangkavi.blogspot.com said...

ஆஹா... இப்படி எல்லாம் வேற நடக்குதா...

செல்வா said...

///அவரு வந்து பார்த்துட்டு தம்பி RAM எங்கப்பான்னு கேட்டாரு.///
அண்ணா ராம்(RAM) இங்க இருக்கார் ..

செல்வா said...

///இத்தன துன்பத்துலயும் ஒரு மகிழ்ச்சி என்னன்னா எப்படியோ ஒரு இடுகை தேத்தியாச்சு. :-))///
அப்படின்னா நாளைக்கு கம்ப்யூட்டர் காணாம போனாலும் அதுலயும் ஒரு மகிழ்ச்சி இருக்கும் .. அப்படித்தான அண்ணா ..??

Unknown said...

நன்றிங்க துளசி கோபால்..
நீங்க சொன்னது புரியல.. :-(

நன்றிங்க வானம்பாடிகள்..

நன்றிங்க வால்..
ஒரு சில CPU க்குதான் பூட்டு போட முடியும். நான் உபயோகப்படுத்துற CPU ல அந்த வசதியும் இல்ல.. :-(

நன்றிங்க சங்கமேஸ்..

நன்றி செல்வா..
ஏன் இந்த கொல வெறி..??

priyamudanprabu said...

இத்தன துன்பத்துலயும் ஒரு மகிழ்ச்சி என்னன்னா எப்படியோ ஒரு இடுகை தேத்தியாச்சு. :-))
///
துன்பத்திலும் இன்பமா

தமிழில் தட்டச்ச..

Google Indic Transliterator

உங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..


எங்க ஊர்காரங்க..