
வெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சு. இனிமேல், சிலருக்கு தூங்கிகிட்டு இருந்த சிறுநீரக கல் பிரச்சினை தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சுடும்.
காலம்காலமா சிறுநீரகத்தோட வேலையே ரத்தத்தில் கலந்துருக்குற தேவையற்ற உப்புகளை நீக்கி அந்த உப்பை எல்லாம் சிறுநீர் வழியா வெளியேத்துறது தான். ஆனா இந்த வெயில் காலத்துல உடம்பில் இருக்குற நீரெல்லாம் வியர்வையாகவே ஆவியாகிடரதுனால உப்புகள் எல்லாம் சிறுநீரகத்துலயே தங்குறதுனால தான் கல் உருவாகுதாம். அதனால இனிமேல் எல்லோரும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதான் கெட்ட உப்பு எல்லாம் சிறுநீரோட வெளியேறும்.
அதோட சிறுநீரகத்த சுத்தமா வச்சுக்க எளிய செலவில் ஒரு இயற்கை வழி இருக்குதாம். ஒரு குத்து 'கொத்தமல்லி தழை' மற்றும் 'தனியா' எடுத்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு சுத்தமான தண்ணீரை ஊற்றி பத்து நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் ஆறவைத்து வடிகட்டி சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி குளிர்பதன பெட்டியில் வைத்து, பிறகு குடிக்கவும்.
இதுபோல தினமும் ஒரு டம்ளர் அளவு இந்த ஆகாரத்தை குடித்து வந்தால் உடம்பிலுள்ள கெட்ட சத்துகள் மற்றும் தேவையற்ற உப்புகளனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். கொத்தமல்லி சிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படுகிறது.
மேலும் இது இயற்கையாக விளையும் பொருள் என்பதால் வேறு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. முயற்சி செய்து பாருங்களேன்.
7 கருத்துக்கள்..:
அருமையான, தேவையான தகவல்..
வாழைத்தண்டு சாறும் நல்லது..
ஆனால் கொத்தமல்லி மிக எளிதாக கிடைக்கிறது
super... tips
ஐயோ... இந்த பிரச்சனைவேற இருக்கா... இனிமேலாவது சாப்பிடணும்... நன்றிங்க...
இந்த மாதிரி கொத்தமல்லி கெடைக்கணுமே திரு:((
@ ஈரோடு கதிர்
@ பிரேமா மகள்
@ க.பாலாசி
நன்றி..
@ வானம்பாடிகள்
இந்த படத்த பார்த்துட்டே, கிடைக்கிற தழைய தின்னுடுங்க.. :-))
நல்லச் சொன்னீங்க.. தகவலுக்கு நன்றிகள். சிறுநீர் கல்லுக்கு வாழத்தண்டு கூட நல்லா இருக்கும். நெறையா தண்ணி குடிக்க சொல்லுறது நூறு சதவிகிதம் ரைட்டு சார்.
பயனுள்ள தகவல். நன்றி.
தமிழில் தட்டச்ச..
உங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..