கூகிள் நிறுவனத்திலிருந்து மற்றுமொரு தேடல் இயந்திரம். ஆனால் இதன் பயன்பாடோ முற்றிலும் உபயோகமானது.
கூகிள் உதவியுடன் ஒரு புதிய தேடல் இயந்திரம்
(Cocodle.com ) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேடல் இயந்திரத்தை நாம் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் ஒரு குறிப்பிட தொகை, சமுதாயத்தில் பின்தங்கியுள்ள குழந்தைகளின் வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும்.
இந்த வலைத்தளத்தை உபயோகபடுத்தினால், கூகுளின் அதே துல்லியத்துடனும் முடிவுகள் இருக்குமென்று உறுதியளிக்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் குறைவாக இருந்தாலும், உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அதிக அளவிலான உதவிகளை உலகம் முழுவதும் விரிவடையச்செய்யும்.
இந்த வலைத்தளத்தை வடிவமைப்பதில் நாங்கள் முனைப்பாக உள்ளோம் எனவும், அதன் மூலம் அக்குழந்தைகளுக்கு உதவ உபயோகிப்பாளர்களது உதவி மிகவும் தேவைப்படும் எனவும் கூறுகின்றனர். பண உதவியோ பொருள் உதவியோ எதிர்பாராமல் இந்த தேடல் இயந்திரத்தை மட்டும் நமது பயன்பாடுகளுக்காக உபயோகப்படுத்த சொல்லுகிறார்கள்.
இந்த அமைப்பின் முக்கிய செயல்பாடுகளாக பின்தங்கியுள்ள குழந்தைகளின் கல்வி மற்றும் உடல்நலத்தை மேம்படுத்துவதாக கூறுகின்றனர். இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களுக்கு உதவுவதன் மூலம் தங்களது சேவையை ஆரம்பம் செய்வதாக உள்ளனர்.இது தொடர்பான செயல்பாடுகளை தங்களது
வலைப்பூவில் பதிவேற்றம் செய்யவுள்ளனர்.
இதுகுறித்தான ஆலோசனைகள் மற்றும் தொடர்புகளுக்கு, cocodle.support@gmail.com மற்றும்
http://www.cocodle.com/en/contact.htm.
தமிழ்மணம் மற்றும் தமிழிஷில் வாக்களித்து அதிக மக்களை சென்றடையச்செய்யுங்கள்..