11 Dec 2009

ஆட்டோவும் நானும்

பெங்களூரிலிருந்து ஒருமுறை ஊருக்கு போகும்பொழுது பனஸ்வாடி ரயில் நிலையத்திலிருந்து டிக்கெட் வாங்கியிருந்தேன். அந்த ரயில் நிலையத்திற்கு செல்வது எனக்கு அதுதான் முதல் முறை, மேலும் நான் தங்கியுள்ள இடத்திலிருந்து ரயில் நிலையத்திற்கு பேருந்து இல்லாததால் ஒரு ஆட்டோ பிடித்தேன்.

'பத்து மணிக்கு மேல் ஆச்சு மீட்டர்க்கு ஒன்னரை மடங்கு ஆகும்' என்றார். சரி பரவால்ல என்று சொல்லிவிட்டு, 'ஒரு பத்து நிமிடம் இருங்க சாப்பிட்டுவிட்டு வருகிறேன்' என்று கேட்டதற்கு 'பத்து ரூபாய் குடுத்துட்டு போங்க தம் அடிச்சுட்டு இருக்கேன்' என்றார். கொடுத்துவிட்டு போய் சாப்பிட்டுவிட்டு வந்து கிளம்பினோம்.

ரயில் நிலையம் வந்தவுடன் மீட்டர் நாப்பது ரூபாய் காட்டியது, அறுபது ரூபாய் கொடுத்தேன்.

ஆட்டோகாரர்: ஒரு பத்து ரூபாய் கொடுங்க.

நான்: அதுதான் அப்பவே கொடுத்தனே!

ஆ.கா: இல்ல இன்னும் பத்து கொடுங்க.

நான்: நீங்க ஒன்னரை மடங்குதானே கேட்டிங்க?

ஆ.கா: பத்து மணிக்கு மேல ஆச்சு, ஒன்னரை மடங்குக்கு யாரு வருவாங்க?

நான்: ..??!!

சரி தொலையட்டும் என்று பாக்கெட்டில் பார்த்தால், அங்கே நூறு ரூபாய்க்கு பதிலாக ஐம்பது தான் இருந்தது(பாக்கட்டில் ஒரு நூறு, ஒரு ஐம்பது, ஒரு பத்து தான் வைத்திருந்தேன்). பிறகுதான் தெரிந்தது அறுபது ரூபாய்க்கு பதிலாக நூற்றிபத்து ரூபாய் கொடுத்துவிட்டேன். பிறகென்ன அவரிடமிருந்து எழுபது ரூபாய் போக நாற்பதை வாங்கிக்கொண்டேன். மனதில் நினைத்துக்கொண்டேன், 'அல்பை பத்து ரூபாய்க்கு ஆசைப்பட்டு, நாப்பது ரூபாய விட்டுடுச்சே என்று'.

அவர் என்ன நினச்சுட்டு போயிருப்பார்??

7 கருத்துக்கள்..:

மேவி... said...

thala... inthe madiriyana exp. enakkum irukku

thiyaa said...

நல்ல பதிவு

வால்பையன் said...

பேராசை பெரு நஷ்டம்னு நினைச்சிகுவான்!

அன்புடன் நான் said...

நல்ல நேர்மையான ஆட்டோ காரர். அவர்... தவறாக நினைக்க மாட்டார். பதிவு நல்லாயிருக்கு.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

follower option இல்லையே பாஸ்.

goma said...

என்னமோ பெங்களூரிலே ஆட்டோ ஓட்டுனர் அதிகமா கேக்க மாட்டார்ன்னு சொல்லிட்டு இருந்தாங்களே....

Unknown said...

நன்றி டம்பி மேவீ
நன்றி தியாவின் பேனா
நன்றி வால்பையன்
நன்றி சி. கருணாகரசு
நன்றி ஸ்ரீ
நன்றி goma

@ ஸ்ரீ: அது எப்படின்னு தெரியல பாஸ், விசாரிச்சுட்டு இருக்கேன். விரைவில் சேர்த்து விடுகிறேன்.

@ goma: அது 19-ம் நூற்றாண்டில் தானாம். :-)

தமிழில் தட்டச்ச..

Google Indic Transliterator

உங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..


எங்க ஊர்காரங்க..